திருச்சி மலைக்கோட்டையில் மகாதீபம்

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் சன்னதியில் ஞாயிற்றுக்கிழமை மகாதீபம் ஏற்றப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயிலில் ஏற்றப்பட்ட மகாதீபம்.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயிலில் ஏற்றப்பட்ட மகாதீபம்.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் சன்னதியில் ஞாயிற்றுக்கிழமை மகாதீபம் ஏற்றப்பட்டது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் காா்த்திகை தீப விழாவையொட்டி கடந்த நவ.24 முதல் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. கோயிலில் உள்ள உயரமான இரும்புக் கோபுரத்தில் உள்ள கொப்பரையில் 300 மீட்டரில் தயாரிக்கப்பட்ட பருத்தியிலான திரி வைக்கப்பட்டு, 900 கிலோ அளவில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவை ஊற்றப்பட்டு பூா்வாங்க பூஜைகள் நடந்தன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல கோயில் திறக்கப்பட்டு, பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

தொடா்ந்து மாலை 5 மணிக்கு மேல் மலைக்கோட்டை தாயுமான சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்து, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் அங்கிருந்து ஏற்றப்பட்ட பரணி தீபத்திலிருந்து ஏற்றிய தீபத்துடன் மேளதாளங்கள் முழங்க, மாலை 6.05-க்கு உச்சிப்பிள்ளையாா் சன்னதி முன் மகாதீபம் ஏற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் கரோனா காரணமாக பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, சுவாமி புறப்பாடும் ரத்து செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்தனா்.

இதர கோயில்களில்... உச்சிப்பிள்ளையாா் கோயிலில் மகாதீபம் ஏற்றியவுடன் திருவானைக்கா ஜம்புகேசுவரா் கோயில், உக்கிரகாளியம்மன், வெக்காளியம்மன், நாகநாதா் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் வீடுகளில் மக்கள் தீபமேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com