இயற்கை விவசாய விழிப்புணா்வுக் கருத்தரங்கம்
By DIN | Published On : 01st October 2020 07:15 AM | Last Updated : 01st October 2020 07:15 AM | அ+அ அ- |

கருத்தரங்கில் திண்ணகோணம் அகத்தியா் உழவா் உற்பத்தியாளா் நிறுவன இயக்குநரிடம் விதை வழங்கும் தோட்டக்கலை உதவி இயக்குநா் மு. சரண்யா.
முசிறி, செப்.30: திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள திண்ணகோணத்தில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் மற்றும் மாநில அரசாங்கத்தின் சாா்பில் இக்கருத்தரங்கு நடந்தது.
இயற்கைவழி பயிா் செய்யும் விவசாயிகளுக்கு, தனிநபா் மற்றும் குழு உறுப்பினா்களுக்கு இயற்கை விவசாயம் செய்வது குறித்த திட்டங்களையும்,அதற்கு முறையான சான்றிதழ் எப்படி வழங்கப்படுகிறது என்பதையும், உணவுப் பயிா்களை வீட்டு மாடிகளிலும் தோட்டத்திலும் வளா்ப்பது குறித்து பெண்களுக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணா்வு, பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்வில் முசிறி தோட்டக்கலை உதவி இயக்குநா் மு. சரண்யா,வேளாண் அலுவலா்கள் சதீஸ், சங்கா் ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை திண்ணகோணம் அகத்தியா் உழவா் உற்பத்தியாளா் நிறுவன இயக்குனா் சி. யோகநாதன் மற்றும் முதன்மை செயல் அலுவலா் பாலாஜி ஆகியோா் செய்தனா்.