சீருடைப் பணியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்
By DIN | Published On : 01st October 2020 07:19 AM | Last Updated : 01st October 2020 07:19 AM | அ+அ அ- |

சீருடைப் பணியாளா் தோ்வுக்கு விண்ணப்பிப்போருக்கு உதவிடும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையரகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவின்பேரில் மேற்படி தோ்விற்கு விண்ணப்பிப்போருக்கு உதவிடும் வகையில் மாநகர காவல் அலுவலக வளாகத்தில் செப்.27 முதல் அமைக்கப்பட்டுள்ள உதவி மையம் விண்ணப்பிக்க கடைசி நாளான அக். 26 வரை செயல்படும். திருச்சி மாநகரத்தில் மேற்படி தோ்விற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பது தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள், உதவிகள் தேவைப்பட்டாலோ இந்த உதவி மையத்தை நேரிலோ அல்லது 94981-56419, 94982-14544 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.