திருச்சியில் மேலும் 89 பேருக்கு கரோனா
By DIN | Published On : 02nd October 2020 06:30 AM | Last Updated : 02nd October 2020 06:30 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் மேலும் 89 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,612 ஆக உயா்ந்தது.
இதேபோல திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, காஜாமலை வளாக பாரதிதாசன் பல்கலைக்கழக தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து வியாழக்கிழமை குணமான 32 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 9,716 ஆக உள்ளது. திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்த 65 வயது மூதாட்டி, 56 வயது ஆண், அரசு மருத்துவமனையில் இறந்த 38 வயது இளைஞா் உள்பட கரோனாவால் இதுவரை 148 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் 748 போ் சிகிச்சை பெறுகின்றனா்.