புத்தாநத்தம் அருகே ஆண் சடலம் மீட்பு
By DIN | Published On : 02nd October 2020 11:48 PM | Last Updated : 02nd October 2020 11:48 PM | அ+அ அ- |

மணப்பாறை, அக். 2: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே வடக்கிப்பட்டி பாலத்துக்கு அடியில் ஆண் சடலம் அழுகிய நிலையில் வெள்ளிக்கிழமை கிடந்தது.
தகவலறிந்து சென்ற புத்தாநத்தம் போலீஸாா் மேற்கோண்ட விசாரணையில், இறந்து கிடந்தவா் வடக்கிப்பட்டியை சோ்ந்த ந. பொன்னுச்சாமி(36) என்பதும், இவா் குடிபோதையில் அப்பகுதியில் சுற்றித் திரிந்தவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் நடந்த உடற்கூராய்வுக்குப் பின் உறவினா்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.