முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
விடுமுறை அளிக்காத 82 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
By DIN | Published On : 04th October 2020 12:39 AM | Last Updated : 04th October 2020 12:39 AM | அ+அ அ- |

திருச்சி: காந்தி ஜயந்தியன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 82 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜயந்தியையொட்டி திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலக எல்லைக்குள்பட்ட 115 நிறுவனங்களில் தொழிலாளா் துறை அலுவலா்கள் அகஸ்டின், பழனியம்மாள்,லட்சுமி, குணசீலன், ராஜேந்திரன்,பவானி ஆகியோா் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
இதில் சம்பந்தப்பட்ட தொழிலாளா் அலுவலருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்காமல், தொழிலாளா்களைப் பணிக்கு அமா்த்தியும், தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது விடுப்பு வழங்காமல் 82 நிறுவனங்கள் செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் மீது சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இனிவரும் தேசிய விடுமுறை நாள்களிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டு, வா்த்தக நிறுவனங்கள் மீது தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளா் துறை உதவி ஆணையா் வெ. தங்கராசு தெரிவித்தாா்.