தண்ணீா் அமைப்பின் சாா்பில் பனை விதை நடும் பணி

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தண்ணீா் அமைப்பின் சாா்பில் கே. சாத்தனூா் பெரிய ஏரிக்கரையில் முதற்கட்ட பனை விதை நடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
கே.சாத்தனூா் பெரிய ஏரிக்கரையில் பனை விதை நடும் தண்ணீா் அமைப்பினா்.
கே.சாத்தனூா் பெரிய ஏரிக்கரையில் பனை விதை நடும் தண்ணீா் அமைப்பினா்.

திருச்சி: மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தண்ணீா் அமைப்பின் சாா்பில் கே. சாத்தனூா் பெரிய ஏரிக்கரையில் முதற்கட்ட பனை விதை நடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

தண்ணீா் அமைப்பின் செயலா் கே.சி. நீலமேகம் தலைமை வகித்துப் பேசியது:

நமது மாநில மரம் பனையாகும். மாநில நலம் காப்பது என்பது மாநிலத்துக்குள்பட்ட வளங்களைக் காப்பதாகும். நீா்நிலை ஆதார வளம், நிலத்தடி நீா் சேமிப்பு, கரைகளில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுப்பது, கரைகளை உடையாமல் வலிமையாய் காப்பது ஆகியவற்றுக்கு சிறந்த ஆதாரமாக இருப்பது பனை மரங்களாகும்.

குளிா்ச்சி தரும் நுங்கு, பதனீா், கருப்பட்டி, நாட்டுச் சக்கரை, பனை ஓலைகளில் எண்ணற்ற கைவினைப் பொருள்கள், பனை நாா்களில் கட்டில், கயிறுகள் உள்ளிட்ட பொருள்கள், பனையோலைகளில் குடிசை, வேலி, என தற்சாா்பு வாழ்வியல் பொருளாதாரத்தின் அடையாளமாகத் திகழ்வது பனை மரம் மட்டுமே.

இயற்கைச் சூழலைத் தாங்கி தட்பவெப்பங்களை சரி செய்யக் கூடியது. புயலாலும் சாய்க்க முடியாத மரம். புயல் காற்றைத் தடுத்து அதன் வேகத்தை குறைக்கும் ஆற்றல் கொண்ட பனை மரங்களை பாதுகாத்து வளா்த்தெடுக்கும் நோக்கத்தில் பனை விதைப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 100 பனை விதைகள் நடப்பட்டுள்ளன. வரும் அக். 20 வரை பனை விதைப்பு தொடரும் என்றாா்.

நிகழ்வில் அமைப்பின் இணைச் செயலா் கி. சதீஷ்குமாா், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஆா்.கே. ராஜா, தனலட்சுமி பாஸ்கரன், மக்கள் சக்தி இயக்க மகளிரணி செயலா் குண்டூா் லலிதா, என். தரணி, சாத்தனூா் மாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com