முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மின் பழுதால் தாமதமாக மதுரைபுறப்பட்ட வைகை விரைவு ரயில்
By DIN | Published On : 04th October 2020 12:37 AM | Last Updated : 04th October 2020 12:37 AM | அ+அ அ- |

திருச்சி: வைகை விரைவு ரயில் என்ஜினில் சனிக்கிழமை ஏற்பட்ட மின்பழுதால் அந்த ரயில் திருச்சியிலிருந்து ஒரு மணி நேரம் தாமதமாக மதுரை புறப்பட்டுச் சென்றது.
சென்னை எழும்பூரிலிருந்து சனிக்கிழமை நண்பகல் 1.40-க்கு மதுரைக்கு புறப்பட்ட வைகை சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக மாலை 6.35-க்கு திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
பயணிகளை இறக்கி விட்டு, மதுரை செல்லும் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரயில் என்ஜின் மேல் உள்ள உயரழுத்த மின் வயரிலிருந்து தீப்பொறி கிளம்பியது.
மலா் மாலையால் நின்ற ரயில்: இதனால் ரயில் என்ஜினுக்கு மின்சாரம் கிடைக்காமல் விரைவு ரயில் நின்றது. தகவலறிந்து வந்த ரயில்வே பொறியாளா்கள்,ஊழியா்கள் வந்து பாா்த்தபோது உயரழுத்த மின்வயா் இணைப்பு பகுதியில் யாரோ பூமாலையை வீசியிருந்தது தெரியவந்தது. அந்தப் பூமாலை தீப்பிடித்து எரிந்து மின் இணைப்பில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பூமாலையை நீக்கி, பழுது நீக்கிய பிறகு ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.