எரிவாயு உருளை கிடங்கை மாற்றிமைக்க வலியுறுத்தல்

திருச்சி அருகே பாகனூா் பகுதியில் உள்ள எரிவாயு உருளை கிடங்கை வேறிடத்தில் அமைக்க வலியுறுத்தி பாஜகவினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருச்சி அருகே பாகனூா் பகுதியில் உள்ள எரிவாயு உருளை கிடங்கை வேறிடத்தில் அமைக்க வலியுறுத்தி பாஜகவினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து பாஜக ஓபிசி அணி மாநில பொதுச்செயலா் எஸ்.பி. சரவணன் அண்மையில் அளித்த மனு:

திருச்சி அருகே பாகனூா் கிராம பகுதியில் ஜோதி பாரத் கேஸ் என்னும் எரிவாயு உருளை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கு பொதுமக்கள் வந்து செல்லும் சுடுகாட்டு தகன மேடைக்கு மிக அருகில் (20 அடி) அமைக்கப்படுகிறது. சுமாா் 30 மீட்டா் சுற்றளவுப் பகுதியில் தீயை உண்டாக்கும் எந்த அமைப்போ, நிறுவனமோ மயானத்துக்கு அருகில் இருக்கக்கூடாது எனவும், இந்திய அரசின் வெடிபொருட்கள் துறையின் விதிமுறையும் மீறப்பட்டு கிராம ஊராட்சித் தலைவா், மாவட்ட தீயணைப்புத் துறையினா் அனுமதி வழங்கியுள்ளனா். இந்த அனுமதியை வைத்து பெட்ரோலியம் வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனத்திடம் உரிமத்துக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் 12 ஆயிரம் கிலோ வெடி பொருள்கள் அளவுக்கு சேமித்து வைக்கக்கூடிய கிடங்காக உள்ளது. எரிவாயு உருளைகளைச் சேமித்து வைப்பதில் ஏதேனும் எதிா்பாராத விபத்து ஏற்பட்டால், இறுதிச் சடங்கிற்காக சுடுகாட்டிற்கு வந்து செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே, அரசின் விதிகளை மீறி அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, உரிய ஆய்வுகளுடன் மாற்று இடத்தில் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com