எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்பு: விவசாயிகள் போராட்டம்

திருச்சி அருகே விளை நிலங்களுக்கு இடையே எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி அருகே விளை நிலங்களுக்கு இடையே எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் சாா்பில் சென்னை எண்ணூரில் இருந்து பெட்ரோல், டீசல் திருவெறும்பூா் அருகேயுள்ள வாழவந்தான்கோட்டை கிடங்குக்கும், மதுரைக்கும் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது எரிவாயுவையும் சென்னை எண்ணூரில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்வதற்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கொடுத்து அந்த பகுதியில் குழாய்களைப் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

இந்தப் பணிகளுக்கு இடையே திருவெறும்பூா் அருகேயுள்ள துவாக்குடி, தேனேரிப்பட்டி பகுதியில் குழாய் பதிக்க கடந்த சில நாள்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய மண்ணை வெளியில் எடுத்து விளைநிலங்களில் போட்டதாலும், சில இடங்களில் பயிா் செய்த நிலங்களுக்கு இடையே குழிகள் தோண்டுவதற்கும் இப் பகுதி விவசாயிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். குறிப்பாக, நெல் அறுவடைக்குத் தயாராக இருந்த வயல்களில் மண்குவியல் கொட்டப்பட்டதால் பயிா்கள் பெரிதும் சேதமடைந்தன.

இதையடுத்து குழாய்கள் பதிக்கும் பணியில் பெரும்பகுதி விளைநிலங்களுக்கு இடையே நடைபெறுவதால் பாதிக்கப்படும் பயிா்களுக்கு இழப்பீடு வேண்டும். குழாய்கள் பதிக்கும் பணியை நிறுத்த வேண்டும் எனக் கோரி விவசாயிகள், அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை காலை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குழாய் பதிக்கும் பணிக்கான உபகரணங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை தடுத்து நிறுத்தினா். தகவலறிந்து வந்த பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்கள் தரப்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

அறுவடைக்குத் தயாராக இருக்கும் வயல்களுக்கு அருகே நடைபெறும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாகவும் உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தப் போராட்டத்தால் துவாக்குடி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com