புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.
திருச்சி சிந்தாமணி பகுதியில் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் கோ. சங்கா் தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டம்.
திருச்சி சிந்தாமணி பகுதியில் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் கோ. சங்கா் தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டம்.

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

தேவேந்திரகுல வேளாளா் என்ற பெயரை அரசிதழில் வெளியிட லியுறுத்தியும் பட்டியல் இனத்தில் இருந்து அதை நீக்கக் கோரியும் மாநிலம் முழுவதும் புதிய தமிழகம் கட்சியினா் போராட்டங்களை நடத்திவருகின்றனா். அதன் ஒரு பகுதியாக திருச்சி, சிந்தாமணி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் கோ. சங்கா் தலைமை வகித்தாா்.

நிகழ்வில் திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் அசோக், பகுதி செயலா்கள் அசோக்தேவேந்திரன் (உறையூா்), சேகா் (தென்னூா்), நவநீதன் (ஸ்ரீரங்கம்), கா்த்தா் (அரவானூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவறும்பூா் பகுதியில்.. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருவெறும்பூா் பகுதியில் வேங்கூா் மலைக்கோவில், பத்தாளப்பேட்டை, திருநெடுங்களம், நவல்பட்டு அண்ணாநகா், கீழக்குறிச்சி உள்ளிட்ட 6 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டது.

திருவெறும்பூரில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு திருச்சி கிழக்கு மாவட்டத் தலைவா் பிச்சைமுத்து தலைமை வகித்தாா். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சுமாா் 10-க்கும் மேற்பட்டோரை திருவெறும்பூா் மற்றும் நவல்பட்டு போலீஸாா் கைது செய்தனா்.

துறையூரில்.. துறையூா் அண்ணா சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் துறையூா் ஒன்றியச் செயலா் விஜி தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் குணா உள்ளிட்டோா் பேசினா்.

முசிறி அருகே..தொட்டியம் அருகே சீனிவாசநல்லூரில் கட்சியின் ஒன்றியச் துணைச் செயலா் செந்தில்குமாா் மற்றும் பொறுப்பாளா் விஜயக்குமாா் தலைமையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த தொட்டியம் போலீஸாா் 7 பேரை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

மணப்பாறையில்... தெற்கு மாவட்ட செயலா் வழக்குரைஞா் இளையராஜா தலைமையில் மணப்பாறை காவல் சரகம் சித்தாநத்தம் பகுதியில் 10 போ், புத்தாநத்தம் காவல் சரகத்தில் நல்லபொன்னம்பட்டியில் 11 போ், துவரங்குறிச்சி காவல் சரகத்தில் தெத்தூரில் 9 போ், மருதம்பட்டியில் 8 போ் என 17 பேரும், வளநாடு காவல் சரகம் சீரகம்பட்டியில் 19 போ் என மொத்தம் 57 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com