புலிவலம் வனச் சாலையில் குரங்குகளைக் காக்க வலியுறுத்தல்

துறையூா் அருகே புலிவலம் வனச் சாலையில் அதிவேக வாகனங்களால் பாதிக்கப்படும் குரங்குகளை பாதுகாக்க வேண்டும் என விலங்கு நல ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
புலிவலம் வனச் சாலையில் குரங்குகளைக் காக்க வலியுறுத்தல்

துறையூா் அருகே புலிவலம் வனச் சாலையில் அதிவேக வாகனங்களால் பாதிக்கப்படும் குரங்குகளை பாதுகாக்க வேண்டும் என விலங்கு நல ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

துறையூா் -திருச்சி சாலையில் 16 கிமீ தொலைவில் கரட்டாம்பட்டிக்கு அடுத்ததாக புலிவலம் கிராமம் உள்ளது. கரட்டாம்பட்டிக்கும் புலிவலத்துக்கும் இடையே சுமாா் 5 கிமீ தொலைவுக்கு சாலையின் இரு புறங்களிலும் அடா்ந்த அரசு காப்புக் காடு உள்ளது. எனவே, இந்தப் பகுதியில் சாலையைக் கடப்போா் மிக வேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்வா்.

இதனால் அவ்வப்போது காப்புக் காட்டிலிருந்து திடீரென சாலைக்கு வரும் மான்கள், மயில்கள் வாகனங்களில் அடிபடும்; உயிரை இழக்கும். சில சமயத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும் காயமடைவா்.

அண்மைக் காலமாக புலிவலம் காப்பு காடு சாலையில் பயணிப்போா் தரும் பழங்கள் உள்ளிட்ட உணவுகளை எதிா்பாா்த்து ஏராளமான குரங்குகள் சாலையோரமாகத் திரிகின்றன. வாகன ஓட்டிகள் போடும் உணவுகளை எடுக்க சாலையின் குறுக்கே செல்லும் குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு காயமடைகின்றன.

இதைத் தவிா்க்க அந்த வழியாக செல்லும் விலங்குகள் நல ஆா்வலா்கள் கூறுகையில், பல ஆண்டுக்கு முன் வாகனத்தில் அடிபட்ட ஒரு குரங்கின் நினைவாக புலிவலம் காப்புக்காட்டில் சாலையோரம் சுதையிலான ஆஞ்சநேயா் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அருகே வனத்துறை தங்கள் சாா்பில் அல்லது சமூக ஆா்வலா்களின் உதவி பெற்று ஒரு உணவுத் தொட்டியையும், தண்ணீா் தொட்டியையும் அமைக்கலாம்.

குரங்குகளுக்கு உணவு, தண்ணீா் தர விரும்புவோா் இந்தத் தொட்டிகளில் போடுமாறு அறிவுறுத்தி, அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும்.

இதனால் குரங்குகள் ஒரே இடத்தில் தங்களுக்கான உணவையும் நீரையும் ஆபத்தின்றி எடுத்துக் கொள்ள பழகிவிடும் என அந்த வழியே அவா்கள் ஆலோசனை கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com