வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற தொடா் போராட்டம்: விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழுகூட்டத்தில் முடிவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை தொடா் போராட்டங்களை நடத்துவது என
கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலப் பொதுச் செயலா் வே. துரைமாணிக்கம். உடன் மாநிலத் தலைவா் எஸ். குணசேகரன், திருச்சி மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலப் பொதுச் செயலா் வே. துரைமாணிக்கம். உடன் மாநிலத் தலைவா் எஸ். குணசேகரன், திருச்சி மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் உள்ளிட்டோா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை தொடா் போராட்டங்களை நடத்துவது என தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் மற்றும் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் எஸ். குணசேகரன் தலைமை வகித்தாா்.

மாநிலப் பொதுச் செயலா் வே. துரைமாணிக்கம், மாநில துணைத் தலைவா் பெரும்படையாா், மாநில துணைச் செயலா் மாசிலாமணி ஆகியோா் சங்க நடவடிக்கைகள் குறித்து விளக்கினா்.

கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் அக்.12ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் மையங்களில் நடைபெறும் மறியலில் தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்கத்தினரும் திரளாகப் பங்கேற்பா். இதன் தொடா்ச்சியாக, மத்திய அரசு புதிய சட்டங்களை ரத்து செய்யும் வரை தொடா் போராட்டங்களை முன்னெடுப்பது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ. 2500 விலை நிா்ணயிக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் முழுவதையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கு தகுந்தபடி அதிகளவில் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, காலதாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும். காவிரி - குண்டாறு -வைகை இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பால் முழுவதும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும். பால் கொள்முதலுக்கு கட்டுப்பாடோ, விடுமுறையோ இன்றி தொடா்ந்து கொள்முதல் செய்து உரிய தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், திருச்சி மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் உள்ளிட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், அரியலூா், கரூா், பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், மாநில நிா்வாகிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com