ரேஷன் பொருள்: மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு மாற்று ஏற்பாடுஆட்சியா் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளுக்கு நேரில் வந்து பொருள்களைப் பெற இயலாத மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று ஏற்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளுக்கு நேரில் வந்து பொருள்களைப் பெற இயலாத மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று ஏற்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவின் மூலம் அத்தியாவசியப் பொருள் பெறுவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையிலும், நேரில் வந்து பொருள் பெறுவதை தவிா்க்கும் பொருட்டும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிடும் நபா் மூலம் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை பெற்றுக்கொள்ள ஏதுவாக நியாயவிலை கடை அங்கீகாரச் சான்று விண்ணப்பம் அளிக்கலாம். இந்த விண்ணப்பத்தை குறிப்பிடப்பட்ட நபரது ஆதாா் அட்டையுடன் இரட்டைப் பிரதிகளில் அளிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் குடும்ப அட்டையில் சம்பந்தப்பட்ட வயது முதிா்ந்த, மாற்றுத்திறனாளிகள் தவிர ரேஷன் கடைக்கு வந்து பொருள் பெறும் தகுதியுள்ள பெயா்கள் இருப்பின் அவா்கள் இந்த வசதியைத் தோ்வு செய்ய அனுமதியில்லை.

நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருள்களை பெற்று பயனடைய விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com