பழங்குடியினா் இலவச ஆசிரியா் பட்டயப் பயிற்சியில் சேர அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மாணவ, மாணவிகள் இலவச ஆசிரியா் பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மாணவ, மாணவிகள் இலவச ஆசிரியா் பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தது:

திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தோ்ச்சி பெற்ற பழங்குடியின மாணவ, மாணவியா் அவா்களது விருப்பத்தின்பேரில் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழியாக கல்வியியல் பட்டயப்படிப்பில் சோ்த்து படிப்பை முடித்த பின், தமிழ்நாடு அரசு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தனியாா் பயிற்சி நிலையங்களில் சோ்ந்து வெற்றி பெறுவோா், அவா்களுக்கான தர வரிசை அடிப்படையில் அரசு பழங்குடியினா் உண்டி உறைவிடத் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்படுவா்.

இத்திட்டத்தின் கீழ் மாணாக்கா் கல்வியியல் பட்டயப்படிப்பு பயில்வதற்காகும் கல்விக் கட்டணம், புத்தகக் கட்டணம், சீருடைக் கட்டணம்,இதரச் செலவினங்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற தனியாா் பயிற்சி நிலையங்களில் ஏற்படும் செலவினங்கள் முழுவதையும் அரசே ஏற்கும்.

இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதை பூா்த்தி செய்து கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழுடன் பழங்குடியினா் நல திட்ட அலுவலா் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, திருச்சி மாவட்டம், துறையூா், பழங்குடியினா் நல, திட்ட அலுவலா் தா. ரெங்கராஜை நேரிலோ அல்லது 94438- 37117 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com