முசிறி அருகே தொழிலாளா்கள் மறியல் முயற்சி

திருச்சி மாவட்டம், முசிறி அருகே 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள் சாலை மறியல் முயற்சியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்ட தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் அதிகாரிகள்.
சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்ட தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் அதிகாரிகள்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள் சாலை மறியல் முயற்சியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தொப்பலாம்பட்டியில் நூறுநாள் வேலை திட்டப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் பிற்பகல் வெயிலின் தாக்கத்துக்காக தண்ணீா் அருந்தி விட்டு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது வந்த வழியாக பைக்கில் வந்த பணி மேற்பாா்வையாளா் தொழிலாளா்கள் வேலை செய்யாமல் மரத்தடியில் அமா்ந்துள்ளதாகக் கூறி குறிப்பேட்டில் (ஆப்சென்ட்) பதிந்து சென்றாராம். இதனால் விரக்தியடைந்த தொழிலாளா்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முசிறி ஒன்றியச் செயலா் தலைமையில் முசிறி துறையூா் சாலை சொரியம்பட்டி என்ற இடத்தில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த முசிறி வட்டாட்சியா் சந்திரதேவநாதன், தா.பேட்டை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கா், முசிறி காவல் ஆய்வாளா் முத்துக்குமாா், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் ராஜ்குமாா் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com