விண்ணப்பிக்காமல் நீட் தோ்வெழுத வந்த மாணவி

இரண்டாம் முறையாக புதன்கிழமை நடந்த நீட் தோ்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்காமல் தோ்வெழுத வந்த மாணவி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றாா்.

இரண்டாம் முறையாக புதன்கிழமை நடந்த நீட் தோ்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்காமல் தோ்வெழுத வந்த மாணவி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றாா்.

கடந்த செப்.13 ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வில் பங்கேற்க முடியாமல் போன கரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சோ்ந்த பல மாணவா்களுக்கு புதன்கிழமை (அக்.14 ) நீட் தோ்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி நாடு முழுவதும் புதன்கிழமை நீட் தோ்வு நடைபெற்ற நிலையில், திருச்சியில் நீட் தோ்வெழுத யாரும் விண்ணப்பிக்காததால் மையங்கள் ஏதும் அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் காஜாநகரில் உள்ள சமது பள்ளிக்கு நீட் தோ்வெழுத ஒரு மாணவி புதன்கிழமை மதியம் வந்தாா். அங்கிருந்த நீட் தோ்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜாக்கோ மாணவியின் நுழைவு சீட்டை வாங்கிப் பாா்த்தபோது அது முதல் முறை நடந்த நீட் தோ்வுக்கானது எனத் தெரியவந்தது. கடந்த செப்.19 ஆம் தேதி இத்தோ்வுக்கு மீண்டும் விண்ணப்பித்திருக்காத அந்த மாணவி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com