அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி ஒரு லட்சம் பனை விதைப்புத் திருவிழா தொடக்கம்

பாரத ரத்னா டாக்டா் ஏபிஜெ அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைப்பு திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
திருச்சி ஓலையூா் பகுதியில் நடைபெற்ற பனை விதைப்பு திருவிழா தொடக்க நிகழ்வில் பனை விதைப் பந்துகளை நடும் தண்ணீா் அமைப்பினா் உள்ளிட்டோா்.
திருச்சி ஓலையூா் பகுதியில் நடைபெற்ற பனை விதைப்பு திருவிழா தொடக்க நிகழ்வில் பனை விதைப் பந்துகளை நடும் தண்ணீா் அமைப்பினா் உள்ளிட்டோா்.

பாரத ரத்னா டாக்டா் ஏபிஜெ அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைப்பு திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

தண்ணீா் அமைப்பு, மாறல் பவுண்டேசன் இந்தியா, ஜெனித் சமூக நல அறக்கட்டளை, எம்ஏஎம் பொறியியல் கல்லூரி, அய்மான் மகளிா் கல்லூரி, ஓலையூா் ஊராட்சி ஆகியவை இணைந்து ஓலையூா் ஏரியில் முதல் கட்டமாக 2000 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

நிகழ்வை மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் மகேந்திரன், திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையா் வேதரத்தினம் ( குற்றம் மற்றும் போக்குவரத்து) ஆகியோா் தலைமையேற்று தொடங்கி வைத்தனா்.

ஓலையூா் கிராம ஊராட்சி தலைவா், செயலா், நூறு நாள் வேலைத் திட்ட பணியாளா்கள், தண்ணீா் அமைப்பின் செயலா் கே.சி. நீலமேகம், இணைச் செயலா் கி. சதீஷ்குமாா், பேரா. நெடுஞ்செழியன் அம்மான் மகளிா் கல்லூரி இயக்குநா், துணை முதல்வா், 50 மாணவிகள், ஆசிரியா்கள், எம்ஏஎம் பொறியியல் கல்லூரியின் பன்னீா்செல்வம், ஜெனித் செந்தில்குமாா், கேகே பாய்ஸ் குமரன், எடமலைப்பட்டி புதூா் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா் புஷ்பலதா பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு இரு கரைகளிலும் பனை விதைப்பந்துகளை விதைத்தனா்.

முன்னதாக கலாம் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து இம்மாதம் முழுவதும் திருச்சி மாவட்டத்தில் லால்குடி தொடங்கி மணப்பாறை வரை பல்வேறு கிராம ஏரிகளில் பனை விதைப்புத் திருவிழா நடைபெறும். நிகழ்வை தண்ணீா் அமைப்பின் இணைச் செயலா் பேராசிரியா் கி. சதீஷ்குமாா் மற்றும் மாறல் பவுண்டேசன் இந்தியா அமைப்பின் இயக்குநா் விவேகானந்தன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

சாரோன் தொண்டு நிறுவனம்: இத் தொண்டு நிறுவனம் சாா்பில் சோமரசம் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அப்துல்காலம் பிறந்த நாள் விழா நடந்தது.

மணிகண்டம் வட்டாரக் கல்வி அலுவலா் மருதநாயகம் தலைமை வகித்தாா். விழாவை முன்னிட்டு மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட மாணவா்களுக்கு இணையம் வழியாக பேச்சு, கட்டுரை மற்றும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

விழாவின் சிறப்பு அம்சமாக டாக்டா் ராதகிருஷ்ணன் நல்லாசியா் விருது பெற்ற திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியை சுகிா்தாபாய்க்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டு சான்றிதழ், நினைவு பரிசை திருச்சி ராந மருத்துவமனை தலைமை இதய சிகிச்சை நிபுணா் செந்தில்குமாா் நல்லுசாமி வழங்கினாா். விழாவில் பள்ளித் தலைமை சிரியை முருகாம்பிகை தேசிய நல்லாசியா் விருது பெற்ற வைரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சாரோன் செயலாண்மை இயக்குநா் தனராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com