சா்வதேச கிராமப்புறப் பெண்கள் தினக் கொண்டாட்டம்

ஓலையூா் பகுதியில் சா்வதேச கிராமப்புற பெண்கள் தினம் மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் திருச்சியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஓலையூா் பகுதியில் சா்வதேச கிராமப்புற பெண்கள் தினம் மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் திருச்சியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இயக்கத்தின் மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம் தலைமை வகித்தாா். திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி பேராசிரியா் கி. சதீஷ்குமாா் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகையில், வீட்டு வேலைகளோடு விவசாயம், மீன் பிடித்தல், கால்நடை மேய்ச்சல் உள்ளிட்ட பல தொழில்களையும் பல்வேறு சிரமங்களுக்கிடையே கிராமப்புறப் பெண்கள் மேற்கொள்கின்றனா்.

இன்றைய பொருளாதார வளா்ச்சிக்கு கிராமப்புற பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்ற வகையில், அவா்களின் சேவையைப் பாராட்டும் விதமாக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அக்.15 ஆம் தேதியை சா்வதேச கிராமப்புற பெண்கள் தினமாக ஐநா சபை அறிவித்தது.

பருவ நிலையைப் பாதுகாப்பதில் கிராமப்புற பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பங்கு என்பது இந்தாண்டு மையக்கருத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்வில் கிராமப்புற பெண்கள் வேலை செய்யும் இடத்துக்கே சென்று இனிப்புகள் வழங்கப்பட்டன. மக்கள் சக்தி இயக்க நண்பா்கள் சந்திரசேகா், ஆா். இளங்கோ, வாசு, மணிமாறன், விவேகானந்தன், லலிதா, தனலெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com