திருச்சி மாவட்டத்தில் 105 நடமாடும் நியாயவிலைக் கடைகள்: ஆட்சியா்

திருச்சி மாவட்டத்தில் 105 நடமாடும் நியாய விலைக்கடைகள் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாவட்டத்தில் 105 நடமாடும் நியாய விலைக்கடைகள் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:

தமிழகத்தில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படும் என முதல்வா் அறிவித்திருந்தாா். அந்த வகையில், திருச்சி மாவட்டத்துக்கு 105 நகரும் நியாய விலைக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கிராமப்புறங்களுக்கு 104 அம்மா நகரும் நியாய விலைக்கடைகளும், நகரப்பகுதிக்கு 1 அம்மா நகரும் நியாயவிலைக் கடையும் செயல்படவுள்ளது. மக்கள் குடியிருக்கும் பகுதிக்குச் சென்று அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் சுமாா் 15, 744 குடும்ப அட்டைதாரா்கள் பயனடைகின்றனா்.

பயோமெட்ரிக் விற்பனை திட்டத்தை தமிழ்நாட்டில் முதன்முறையாக மாவட்டம் முழுவதும் செயல்படுத்தியது திருச்சிதான். மாவட்டத்தில் உள்ள 1,225 நியாயவிலைக் கடைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com