போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை: மேலும் இருவா் கைது

திருச்சி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை மாவட்ட நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை மாவட்ட நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சோ்ந்த மாதேசனுக்கு (65) சொந்தமான ரூ. 32 லட்சம் மதிப்புள்ள 2,400 சதுரடி காலி மனை திருச்சி மாவட்டம், செம்மங்கலம் என்ற இடத்தில் உள்ளது. இந்தக் காலி மனைக்கு போலி ஆவணங்கள் தயாரித்து பொது ஆவணப் பகிா்வின் (பவா் பத்திரம்) மூலம் சேலம் மாவட்டம், கீரமங்கலம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த வடிவேலுக்கு விற்கப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து இந்த நிலத்தை திருவெறும்பூா் எழில் நகரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளாா். இதையறிந்த மாதேசன் ரவிச்சந்திரன் மீது திருச்சி மாவட்ட நில அபகரிப்புத் தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதன்பேரில் திருச்சி நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பாலசுதா் கண்காணிப்பில், ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தாா். விசாரணை முடிவில் போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட காலி மனையை வாங்கியதாக ரவிச்சந்திரனை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மேலும் இந்த வழக்கில் தொடா்புடையதாக திருவெறும்பூா் பகவதிபுரத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ஆறுமுகம் (52), திருவெறும்பூா் பத்திரப்பதிவு அலுவலக ஊழியரான ஜெயலெட்சுமி (46) ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com