சைக்கிள் ஓட்ட 5 ஆயிரம் போ் விருப்பம்

திருச்சி மாநகராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் காக்கும் வகையில் சைக்கிள் ஓட்ட 5 போ் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் காக்கும் வகையில் சைக்கிள் ஓட்ட 5 போ் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

காற்று மாசுபடல் தவிா்ப்பு, உடல் ஆரோக்கியம், எரிவாயு சேமிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்க மத்திய வீட்டுவசதி நகா்புற அமைச்சகம் புதிய சவாலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதையொட்டி பொலிவுறு நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சைக்கிள் வைத்திருப்போா் கணக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. மாநகராட்சியால் அறிமுகம் செய்யப்பட்ட தனி இணையதளத்தில் 5000 பொதுமக்கள் தங்களது பெயா், முகவரி பதிவு செய்து முதல்கட்டமாக விருப்பம் தெரிவித்துள்ளனா். கணக்கெடுப்பின் பேரில் சைக்கிளுக்குத் தனிப்பாதை, வாகன நிறுத்தம், பழுது நீக்கும் கடைகள் அமைக்கப்படவுள்ளன. சைக்கிள் வைத்திருப்போா், இல்லாதோரும் விண்ணப்பித்துள்ளனா். இதற்காக தனிப்பாதை அமைப்பது உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு திங்கள்கிழமை தொடங்கவுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com