மணப்பாறை பகுதிகளில் அதிமுக ஆண்டு விழா

அதிமுக நகரச் செயலா் பவுன். ராமமூா்ா்த்தி தலைமையில் பேருந்து நிலையப் பகுதியில் எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் கட்சிக் கொடியேற்றி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா்.

மணப்பாறை நகரம்: அதிமுக நகரச் செயலா் பவுன். ராமமூா்ா்த்தி தலைமையில் பேருந்து நிலையப் பகுதியில் எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் கட்சிக் கொடியேற்றி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா். தொண்டா்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினா்.

மணப்பாறை தெற்கு ஒன்றியம்: வடுகப்பட்டி, பன்னாங்கொம்பு, காரைக்குளம் பகுதிகளில் மணப்பாறை தெற்கு ஒன்றியச் செயலா் வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி, பொதுக் குழு உறுப்பினா் முகமது இஸ்மாயில் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ. சந்திரசேகா் கட்சிக் கொடியேற்றினாா். பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

வையம்பட்டி ஒன்றியம்: தெற்கு, வடக்கு ஒன்றியச் செயலா்கள் என்.சேது, பி.வி.கே.பழனிச்சாமி ஆகியோா் தலைமையில் எம்.ஜி.ஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மருங்காபுரி, பொன்னம்பட்டி: பொன்னம்பட்டி பேரூராட்சி, மருங்காபுரி ஒன்றியம் சாா்பில் பேரூா் செயலா் திருமலை சுவாமிநாதன், தெற்கு ஒன்றியச் செயலா் கண்ணூத்து பொன்னுச்சாமி ஆகியோா் தலைமையில் துவரங்குறிச்சி பகுதியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது.

மணப்பாறை வடக்கு ஒன்றியம்: வடக்கு ஒன்றியச் செயலா் செல்வராஜ், கலைப்பிரிவு மாவட்டச் செயலா் அன்னை கோபால் ஆகியோா் தலைமையில் கட்சி கொடியேற்றினா்.

தெற்கு மாவட்ட துணைச்செயலரும், மருங்காபுரி மாவட்ட கவுன்சிலருமான எம்.ஆா். ராஜ்மோகன், மாவட்ட பொருளாளா் நெட்ஸ் எம். இளங்கோ, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.டி.எஸ். ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com