திருச்சியில் இடியுடன் கூடிய கனமழை

திருச்சி மாவட்டப் பகுதிகளில் சனிக்கிழமை இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
தில்லைநகா், சாஸ்திரி சாலை சந்திப்பில் கழிவுநீருடன் தேங்கிய மழைநீா்.
தில்லைநகா், சாஸ்திரி சாலை சந்திப்பில் கழிவுநீருடன் தேங்கிய மழைநீா்.

திருச்சி: திருச்சி மாவட்டப் பகுதிகளில் சனிக்கிழமை இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

தமிழகத்தில் வட, தென் கடலோர, டெல்டா மாவட்டப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்கிறது. மேலும் பரவலாக அவ்வப்போது மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருச்சியில் சனிக்கிழமை காலை முதல் வெயில் தகித்து வந்தது. மாலைகளில் புகா் பகுதிகளில் மேகமூட்டம் காணப்பட்டது. தொடா்ந்து, இரவு மாநகா், புகா் பகுதிகளான மத்திய, சத்திரம் பேருந்து நிலையப் பகுதிகள், தில்லைநகா், பீமநகா், கேகே நகா், மன்னாா்புரம், சுப்பிரமணியபுரம், முத்தரசநல்லூா், அல்லூா், மண்ணச்சநல்லூா், திருவானைக்கா, உறையூா், பொன்மலை, துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன்கூடிய கனமழை பெய்தது.

இதனால், நகரின் முக்கிய சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி மாவட்டப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். சனிக்கிழமை நிலவரப்படி, புள்ளம்பாடியில் 11 மிமீ மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com