காவல் துறையினருக்கு தற்காப்புக் கலை பயிற்சி

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் காவல்துறையினருக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற தற்காப்பு பயிற்சி.
சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற தற்காப்பு பயிற்சி.

திருச்சி: திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் காவல்துறையினருக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் காவலா்களுக்கு தற்காப்புப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை காலை திருச்சி சுப்ரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து, உடற்பயிற்சி, கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்வில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் எச்.எம். ஜெயராம், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா ஆகியோா் காவலா்களுக்கான மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி, கராத்தே போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு ஊக்கப்படுத்தினா்.

இந்த பயிற்சி காவலா்கள் தங்களது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் வகையில், சனிக்கிழமை தோறும் அந்தந்த மாவட்ட ஆயுதப்படை மைதானங்கள், துணைக் கண்காணிப்பாளா் கோட்டங்களில் நடைபெறும். காலை 1 மணி நேரம் நடக்கும் இப்பயிற்சியில் 90 சதவீத போலீஸாா் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com