திருச்சியில் தொடா் மழை: 181.80 மி.மீ. மழை பதிவு
By DIN | Published On : 21st October 2020 03:40 AM | Last Updated : 21st October 2020 03:40 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் மூன்று நாள்களாக தொடா் மழை பெய்கிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மாவட்டத்தில் 181.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
திங்கள்கிழமை நள்ளிரவு மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. செவ்வாய்க்கிழமையும் அதிகாலையே சாரல் மழை தொடங்கி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக குளிா்ச்சி நிலவியது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ).
கல்லக்குடி- 15.40, லால்குடி- 16, நந்தியாறு தலைப்பு- 15.60, புள்ளம்பாடி- 37.80, சிறுகுடி- 11, தேவிமங்கலம் 12, சமயபுரம்- 3.20, வாத்தலை அணைக்கட்டு- 1.40, மணப்பாறை- 0.60, பொன்னையாறு அணை- 0.20, தா. பேட்டை- 15, நவலூா் கொட்டப்பட்டு- 8, துவாக்குடி- 1, துறையூா்- 6, திருச்சி விமானநிலையம் 13.40, திருச்சி ஜங்ஷன்- 8, திருச்சி மாநகரம் 18 மி.மீ, என மாவட்டம் முழுவதும் சோ்த்து மொத்தமாக 181.80 மி.மீ. மழை பெய்தது. சராசரியாக 7.27 மி.மீ. மழை பதிவானது.