சித்த மருத்துவா்கள் நலச் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 31st October 2020 07:50 AM | Last Updated : 31st October 2020 07:50 AM | அ+அ அ- |

முசிறியில் ஒருங்கிணைந்த மரபு வழி சித்த மருத்துவா்கள் நலச் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
சங்க செயல் தலைவா் சோலைமலை வரதராஜன் தலைமை வகித்தாா். சட்ட ஆலோசகா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான ஆ.சா. பழனிச்சாமி பங்கேற்று சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினாா். சங்க ஆலோசனை குழுத் தலைவா் கோசிபா வரவேற்றாா்.