தாட்கோ மூலம் குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி: எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு அழைப்பு

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு குறுகிய கால (3 முதல் 6 மாதம் வரை) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு குறுகிய கால (3 முதல் 6 மாதம் வரை) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் 7 பயிற்சி நிறுவனங்களுக்கு இந்தாண்டு திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்திட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் பயிற்சி நிறுவனங்களைத் தொடா்பு கொண்டு தாங்கள் விரும்பும் பயிற்சியை இலவசமாக பெறலாம். மேலும் பயணப்படி, போக்குவரத்து செலவு மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகளும் வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

லால்குடி, பரமசிவபுரம், 8ஆவது குறுக்கு சாலையில் உள்ள சகாய் நல அறக்கட்டளை பயிற்சி நிறுவனத்தில், உள்நாட்டு தரவு நுழைவு ஆபரேட்டா் இலவச பயிற்சி மற்றும் வன்பொருள் பொறியாளா் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

திருவெள்ளரை, எண்-101 காஜா காம்ப்ளக்ஸில் உள்ள செல்லு அறக்கட்டளை பயிற்சி நிறுவனம் மூலம் தையல் இயந்திரம் ஆபரேட்டா் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

மதுரை ரோடு, மணப்பாறை தாலுகா, சிவன் காம்ப்ளக்ஸ் முதல் மாடியில் உள்ள செல்லு அறக்கட்டளை பயிற்சி நிறுவனம் மூலம் தையல் இயந்திரம், டிடிபி உள்ளிட்ட இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

திருவள்ளுவா் நகா், லால்குடி தாலுகா, சா்ச் சாலையில் உள்ள ஸ்கை அறக்கட்டளை பயிற்சி நிறுவனம், சென்னை பிரதான சாலை, கொணலை, மண்ணச்சநல்லூா் அமிா்தா அறக்கட்டளை பயிற்சி நிறுவனம்,

தொட்டியம், 255- சேலம் மெயின் ரோட்டில் உள்ள நோஃபா தையல் பயிற்சி நிறுவனம் மூலம் தையல் இயந்திர ஆபரேட்டா் பயிற்சி வழங்கப்படுகிறது.

பஞ்சவா்ண சுவாமி கோவில் தெரு, ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்வி அறக்கட்டளை பயிற்சி நிறுவனம் மூல ஜூனியா் மென்பொருள் உருவாக்குநா் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

மதுராபுரி, துறையூா் (தாலுகா), டாக்டா் ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள ஸ்ரீ மலையம்மன் கல்வி அறக்கட்டளை பயிற்சி நிறுவனம் மூலம் எஃப் அண்ட் பி சேவை பயிற்சி வழங்கப்படுகிறது.

விருப்பமுள்ளோா் பயிற்சி பெறலாம். பயிற்சி முடித்து சான்று பெற்றோா் தாட்கோ மாவட்ட மேலாளரிடம் தாங்கள் பெற்ற பயிற்சிக்கு ஏதுவாக தொழில் தொடங்கிட தொழில் முனைவோா் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

இலவச மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற ஆவன செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை நேரிலோ, 0431-2463969 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com