மருத்துவமனை ஊழியா்களைத் தாக்கியவா் மீது வழக்கு
By DIN | Published On : 31st October 2020 12:58 AM | Last Updated : 31st October 2020 12:58 AM | அ+அ அ- |

திருச்சி, பொன்மலை ரயில்வே மருத்துவமனை ஊழியா்களை தாக்கியவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி பொன்மலை பழைய டீசல் காலனியை சோ்ந்தவா் சந்திரசேகரன் (34). ரயில்வே ஊழியரான இவா் கீழே விழுந்து காயமடைந்து பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த நிலையில், உணவு சாப்பிட்டபோது சாம்பாரை படுக்கையில் கொட்டி விட்டாராம். இதைப் பாா்த்த காயங்களுக்கு கட்டு போடும் ஊழியரான சரவணன் அவரைக் கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகரன் சரவணனைத் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், சந்திரசேகரன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சாா்ஜ் ஆகிச் சென்று விட்டாா்.
இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.