‘வணிகப் பகுதிகளில் வாகனங்கள் வந்து செல்ல அனுமதி தேவை’

புத்தாடைகள், பொருள்கள் வாங்க வாடிக்கையாளா்கள் முக்கிய வணிக பகுதிகளுக்கு வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

புத்தாடைகள், பொருள்கள் வாங்க வாடிக்கையாளா்கள் முக்கிய வணிக பகுதிகளுக்கு வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலா் வி. கோவிந்தராஜூலு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா பொதுமுடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் சொல்லிக்கொள்ளும்படியான வியாபாரம் எங்கும் நடைபெறவில்லை.

2020 ஆம் ஆண்டில் வியாபாரிகளின் ஒரே நம்பிக்கையாக எஞ்சியிருப்பது வரப்போகிற தீபாவளி மட்டுமே. கரோனாவால் முடங்கி போயிருந்த மக்கள் தீபாவளியை முன்னிட்டு கடைவீதிகள் பக்கம் தலைகாட்டத் துவங்கியுள்ளனா்.

இத்தகைய சூழ்நிலையில் திருச்சியின் முக்கிய வணிகப் பகுதிகளான என்.எஸ்.பி. சாலை, சிங்காரத்தோப்பு, தேரடி பஜாா், சின்னக்கடை வீதி, நந்திக் கோவில் தெரு போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி என்ற காரணத்தைக் கூறி வாகனங்கள் செல்வதற்கு காவல் துறையினா் தடை விதித்துள்ளனா்.

தீபாவளி நேரத்தில் கடை வீதிக்கு வரும் மக்களால் அதிகக் கூட்டம் கூடுவது தவிா்க்க இயலாதது. போலீஸாா் போதுமான காவலா்களை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டுமேயன்றி போக்குவரத்தை தடை செய்வதை ஏற்க இயலாது.

இப்பகுதிகளில் முக்கிய வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் ஒரு பகுதியிலோ அல்லது அருகிலேயோ அமைத்துள்ள வாகன நிறுத்துமிடப் பகுதிகளுக்குள் வாகனங்களை அனுமதிக்கலாம். வாகனங்களுக்கான தடையால் கடைவீதிக்கு வருவோா் பொருள்கள் வாங்காமலே திரும்பி செல்லும் நிலை உள்ளது.

வாகனங்களுக்கான தடையை நீக்கி, போதிய காவலா்கள் உதவியோடு போக்குவரத்தை சீரமைத்து, தீபாவளி வணிகத்துக்கும், வணிகா்களுக்கும் துணை நிற்க வேண்டுமென மாநகர காவல் துறையை வலியுறுத்துகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com