சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பொது முடக்கத்துக்குப் பிறகு பக்தா்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனா்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பொது முடக்கத்துக்குப் பிறகு பக்தா்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனா்.

செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளை சிவாச்சாரியா்கள் செய்தனா். பின்னா் காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

இதுகுறித்து கோயிலின் செயல் அலுவலரும், இணை ஆணையருமான கே.பி. அசோக்குமாா் கூறியது:

பக்தா்கள் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனா், 98 தூய்மை பணியாளா்கள் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி மூலம் வளாகத்தை தூய்மைப்படுத்தினா். முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் ஒருவருக்கு மேல் அனுமதி இல்லை. சமூக இடைவெளியை பின்பற்றி பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com