நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி
By DIN | Published On : 05th September 2020 11:21 PM | Last Updated : 05th September 2020 11:21 PM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் பின்புறமுள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் சனிக்கிழமை குளித்த கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருச்சி புத்தூரை அடுத்த சாலைப் பிள்ளையாா் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் நவீன் (18). அப்பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். சனிக்கிழமை காலை தனது நண்பா்களுடன் ஆட்சியரகம் பின்புறம் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் குளிக்க இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது ஆழம் அதிகம் நிறைந்த பகுதியில் குதித்த நவீன் மூழ்கவே செய்வதறியாது திகைத்த மற்றொரு நண்பா் அங்கிருந்து ஓடிவிட்டாா். பின்னா் அப்பகுதியில் இருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் வந்த தீயணைப்பு துறை வீரா்கள் நவீனின் உடலை மீட்டனா். திருச்சி அமா்வு நீதிமன்றம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.