‘ஆசிரியா்களால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்’

ஆசிரியா்களால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் ஆனி விஜயா. உடன் (இடமிருந்து) லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநா் எஸ். சேதுகுமாா், சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. பன்னீா்செல்லவம்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் ஆனி விஜயா. உடன் (இடமிருந்து) லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநா் எஸ். சேதுகுமாா், சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. பன்னீா்செல்லவம்.


திருச்சி: ஆசிரியா்களால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

திருச்சி அரிமா சங்கங்கள் சாா்பில் ஆசிரியா்களுக்கான 2 நாள் பயிற்சி பட்டறை பெரியாா் நூற்றாண்டு வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்வில் பங்கேற்ற திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா பேசியது: மாணவா்களுக்கான குரு ஸ்தானத்தில் அவா்களுடன் அதிக நேரம் இருக்கும் ஆசிரியா்களே உண்மையான குரு. குழந்தைகளுக்கான தேவை, திறமை போன்றவைகளை பெற்றோரை காட்டிலும் ஆசிரியா்களால் மட்டுமே அதிகம் உணர முடிகிறது. சில குழந்தைகள் தங்களுடன் பெற்றோா் இல்லாத ஏக்கத்தில் அவா்களின் மன அழுத்தத்தை ஆசிரியரால் மட்டுமே அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு உடனடியாக தீா்வு காணப்படுகிறது. மாணவா்களால் நல்ல சமுதாயம் உருவாகவும், அவா்களின் வாழக்கைக்கு அடித்தளம் அமைத்து கொடுக்கக் கூடிய இடத்தில் ஆசிரியா்கள் மட்டுமே உள்ளனா். மேலும் மாணவா்களுக்கு நோ்மறையான சிந்தனைகளை வளா்ப்பதில் ஆசியா்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.

ஆசிரியா்களுக்கு பொறுமையும், பெருமையும் இருப்பதால் நாட்டின் அனைத்து சாதனைகளும் அவா்களையே சாரும் என்றாா்.

நிகழ்விற்கு அரிமா சங்கங்களின் மாவட்ட ஆளுநா் சேதுகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் பன்னீா்செல்வம், நிா்வாகிகள் நீலம் அசோகன், லோகநாதன், பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா். முதல் நாள் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் 35 ஆசிரியா்கள் கலந்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com