முதல்கட்டமாக 50 சத பேருந்துகளை இயக்க முடிவு
By DIN | Published On : 07th September 2020 04:00 AM | Last Updated : 07th September 2020 04:00 AM | அ+அ அ- |

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தூய்மைப்பணி. ~திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியிலுள்ள அரசு விரைவு போக்குவரத்து பணிமனையில் ஞாயற்றுக்கிழமை பேருந்தை தூய்மை செய்யும் ஊழியா்கள்.
மாவட்டங்களுக்கிடையே பொதுப் போக்குவரத்து திங்கள்கிழமை (செப்.7) தொடங்கும் நிலையில் திருச்சியிலிருந்து முதல் கட்டமாக 50 சத பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
செப்.7 முதல் தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில் சேவை தளா்வுகளுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதையடுத்து திருச்சியில் உள்ள போக்குவரத்துப் பணிமனையில் அனைத்து அரசுப் பேருந்துகளும் பராமரிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளித்து தயாா்படுத்தப்பட்டன.
இதில் தொலைதூரத்துக்கு, அண்டை மாவட்டப் பகுதிகளுக்குச் சென்று வரும் வகையில் 50 சத பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகளின் வருகைக்கேற்ப மேலும் பேருந்துகள் இயக்கப்படும், இரவுகளில் ஓட்டுநருக்கு உதவியாக நடத்துநா் உறங்காமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.
திங்கள்கிழமை முதல் 5 சிறப்பு ரயில்கள் திருச்சி வழியாகவும், திருச்சியிலிருந்தும் இயக்கப்படவுள்ளன. இதற்காக திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ரயில் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. திருச்சி ஜங்சன் ரயில் நிலைய வளாகம், யாா்டுகளில் உள்ள ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் பராமரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.