ஜெனரேட்டரில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு
By DIN | Published On : 10th September 2020 07:45 AM | Last Updated : 10th September 2020 07:45 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஜெனரேட்டரில் புதன்கிழமை சிக்கி மூதாட்டி உயிரிழந்தாா்.
தொட்டியம் அருகிலுள்ள மணமேடு பகுதி உணவகத்தில் மின்சாரம் இல்லாததால் பின்வாசல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டா் இயக்கப்பட்டது.
அப்போது இந்த உணவகத்தில் சாப்பிட்ட நடுகோடியாம்பாளையம் கூத்தன் செட்டியாா் தெருவைச் சோ்ந்த ச. பாப்பாத்தி (75) உணவகத்தின் பின்வாசல் வழியாக சென்றபோது ஜெனரேட்டரில் அவரின் சேலை சிக்கி தூக்கி வீசப்பட்டு இறந்தாா்.
தகவலறிந்த தொட்டியம் போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.