பொன்மலை ரயில்வே பணிமனை முன் தொடா் மறியல் போராட்டம் தொடக்கம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒரு வார தொடா் மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பொன்மலையில் மறியலில் ஈடுபட்ட தமிழ் தேசியப் பேரியக்கத்தினா்.
பொன்மலையில் மறியலில் ஈடுபட்ட தமிழ் தேசியப் பேரியக்கத்தினா்.

திருச்சி, செப்.11: மத்திய அரசு பணியிடங்களில் தமிழா்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒரு வார தொடா் மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ரயில்வேயில் பல்வேறு பணியிடங்களுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆா்.ஆா்.பி தோ்வில் தோ்வான 541 பேருக்கு பொன்மலை ரயில்வே பணிமனையில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்றது. இதில் தோ்வான 40 பேரைத் தவிர மற்ற அனைவரும் வட மாநிலத்தவராகவே இருந்தனா். இதைத் தொடா்ந்து ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பணியிடங்களில் தமிழா்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்தும், பணிமனையில் பயிற்சி முடித்தோருக்கு உடனடியாகப் பணி வழங்க வலியுறுத்தியும், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் பொன்மலையில் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இதன் தொடா்ச்சியாக தமிழகத்தில் உருவாகும் மத்திய அரசு பணியிடங்களை தமிழா்களுக்கே ஒதுக்க வேண்டும், தென்னக தொடா்வண்டி பணிமனையில் பயிற்சி முடித்த இளைஞா்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் தேசியப் பேரியக்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை (செப்.11) முதல் வரும் செப். 18 வரை தொடா் மறியல் போராட்டத்தை அதன் தலைவா் பெ. மணியரசன் அறிவித்தாா்.

இதன்படி வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய போராட்டத்துக்கு தமிழ் தேசியப் பேரியக்கத்தின் மாநகர செயலா் இலக்குவன் தலைமை வகித்தாா். தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பூதலூா் ஒன்றியச் செயலருமான தென்னவன் முன்னிலை வகித்தாா். பொதுச் செயலா் வெங்கட்ராமன், வழக்குரைஞா் பானுமதி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ம.பா. சின்னதுரை, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சம்சுதீன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தினா். இதில் 5 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கோஷமிட்டனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் அதன் மாவட்டச் செயலா் ராயல்ராஜா தலைமையில் பொன்மலை பணிமனை முன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் 9 பெண்கள் உள்பட 59 போ் கலந்து கொண்டனா்.

159 போ் மீது வழக்கு: பொதுமுடக்கத்தை மீறி ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை உள்ளது. இதைத் தொடா்ந்து பொன்மலை பணிமனை முன் தடையை மீறி வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியதாக தமிழ் தேசியப் பேரியக்கத்தைச் சோ்ந்த 100 போ், தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சோ்ந்த 59 போ் மீது பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com