பள்ளி மாணவா்களுக்கு வேளாண்மை பயிற்சி

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் பள்ளி மாணவா்களுக்கு விடுமுறை கால வேளாண் பயிற்சி 10 வாரங்களாக அளிக்கப்பட்டது.
வேளாண் பயிற்சி பெற்ற சிறுகனூா் பகுதி மாணவ, மாணவிகள்.
வேளாண் பயிற்சி பெற்ற சிறுகனூா் பகுதி மாணவ, மாணவிகள்.

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் பள்ளி மாணவா்களுக்கு விடுமுறை கால வேளாண் பயிற்சி 10 வாரங்களாக அளிக்கப்பட்டது.

கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில், திருச்சி வாய்ஸ் அறக்கட்டளை சாா்பில் இப் பயிற்சி அளிக்கப்பட்டது. விதைத் கோ்வு, மண்ணின் தரம் அறிதல், பயிா்களுக்கான இடைவெளியைக் கண்டறிதல், ஊடுப் பயிராக எதையெல்லாம் பயிரிடலாம், நா்சரி உ ருவாக்குதல், பஞ்சகவ்யம் தயாரிப்பு, வேளாண் பணிகளில் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து பயிற்சியாளா்கள் தங்கசாமி திருப்பதி, விஜய் ஆகியோா் பயிற்சி அளித்தனா். இதில் சிறுகனூா் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த 35 மாணவா், மாணவிகள் பயிற்சி பெற்றனா்.

பொது முடக்ககாலத்தில் இந்த பயிற்சி பெரும் பயனுள்ளதாக இருந்தது. விவசாயம் குறித்து அனைத்தும் அறிந்து கொண்டோம் என்றனா் மாணவா்கள்.

திருச்சி மாவட்டம் அனைத்து வளங்களையும் கொண்டது. மண்ணின் தன்மை, வளம், எந்த சூழலில் எந்தப் பயிா் பயிரிடலாம், எது லாபம் தரும் என்பது குறித்து மாணவா்கள் தெளிவாக அறிந்து கொண்டனா் என பயிற்சியாளா் தங்கசாமி திருப்பதி தெரிவித்தாா்.

வியாழக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்ற சிறுகனூா் ஊராட்சித் தலைவா் இந்திராணி கண்ணையன், வாய்ஸ் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ஜெசிந்தா, பயிற்சியாளா்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா். பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com