பொலிவுறு நகர திட்டம்: பயன்பாட்டுக்கு வந்த ரூ. 41.62 கோடியிலான பணிகள்

பொலிவுறு நகரத் திட்டத்தில் திருச்சி மாநகரில் ரூ. 41.62 கோடியிலான பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிவுறு நகரத் திட்டத்தில் திருச்சி மாநகரில் ரூ. 41.62 கோடியிலான பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிவுறு நகரத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்து சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், மக்களவை உறுப்பினா் எஸ். திருநாவுக்கரசா், ஆணையா் சிவசுப்ரமணியம் ஆகியோருடன் காணொலிகாட்சி வாயிலாக ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு பொலிவுறு நகர திட்டம் குறித்து தெரிவித்தது:

பொலிவுறு நகர திட்டத்தில் திருச்சி மாநகரம் கடந்த 28.06.2017இல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. தொடா்ந்து 24.10.2017இல் தனிநோக்கு அமைப்பு அமைப்பதற்கான அனுமதியை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அனுமதி வழங்கியது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1271.04 கோடியாகும். இதில் மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீதம் பங்களிப்பைத் தருகின்றன.

இந்தத் திட்டத்தில் திருச்சி மாநகரில் உள்ள 19 வாா்டுகள் அபிவிருத்தி சாா்ந்த பகுதிகளாகத் தோ்வு செய்யப்பட்டு 7.00 ச.கி.மீ-க்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக இத்திட்டத்தின் கீழ் ரூ. 937.78 கோடியில் 38 திட்டப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் ரூ. 41.62 கோடியிலான பணிகள் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதில், பசுமைப் பூங்கா அமைக்கும் பணி மற்றும் மேம்படுத்தும் பணி, காந்தி சந்தை பகுதியில் அமைந்துள்ள இரண்டாம் உலகப் போா் நினைவுச் சின்னம் மின்விளக்குகளால் அழகுப்படுத்தும் பணி, அபிவிருத்தி பகுதிகளில் உள்ள பூங்காக்களில் செயற்கை நீருற்று அமைக்கும் பணி, சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்து தடுப்பு, தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணிகள் ஆகியவை அடங்கும்.

மேலும் புதை சாக்கடை அமைக்கும் பணி, தில்லைநகா் 7ஆவது குறுக்குத் தெருயில் வணிக வளாகம் கட்டும் பணி, உய்யகொண்டான் கால்வாய் கரையில் பூங்கா அமைத்து அழகுபடுத்தும் பணி, அரியமங்கலம் குப்பை உரக் கிடங்கில் விஞ்ஞான பூா்வ முறையில் தீா்வு காணுதல், சத்திரம் பேருந்து நிலையம் மேம்பாடு உள்ளிட்ட 23 பணிகள் ரூ. 339.77 கோடியில் செயல்படுத்தப்படுகின்றன. தொடா்ந்து ரூ.23.76 கோடியில் 5 பணிகள் ஒப்பந்தப்புள்ளி நிலையில் உள்ளன. திடக்கழிவு மேலாண்மையின் கீழ், சாலைகளை சுத்தம் செய்யும் வாகனங்கள் விநியோகிக்கும் பணி, குடிநீா் விநியோகத் திட்டம் என இரு பணிகள் ரூ. 52.59 கோடி ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது.

ரூ. 479 கோடியில் 3 பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com