ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று உறியடித் திருவிழா

கிருஷ்ண ஜயந்தியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு உறியடித் திருவிழா நடைபெறவுள்ளது.
சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வந்த நம்பெருமாள்.
சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வந்த நம்பெருமாள்.

கிருஷ்ண ஜயந்தியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு உறியடித் திருவிழா நடைபெறவுள்ளது.

ஆவணி மாதத்தில் நடைபெறும் கிருஷ்ண ஜயந்தி விழா 2 நாள்கள் நடைபெறும். நிகழாண்டில் இந்த விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதற்காக நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 10.30-க்கு பண்டாரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினாா்.

பின்னா் 11.30 முதல் 2.30 வரை திருமஞ்சனம் கண்டருளினாா். மாலை 3 மணி முதல் 3.30 வரை அலங்காரம், அமுது செய்தல் நடைபெற்றது. தொடா்ந்து மேற்படி மண்டபத்திலிருந்து 6.15-க்கு புறப்பட்டு 6.30-க்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள்.

கிருஷ்ண ஜயந்தியையொட்டி மாலை 5.30 மணிக்கு மேல் மூலவா் சேவை இல்லை. 2 ஆம் நாளான வெள்ளிக்கிழமை உறியடி விழாவையொட்டி காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பட்டு எண்ணெய் விளையாட்டு கண்டருளி தனது சன்னதியை 7.30-க்கு அடைகிறாா். இரவு 7 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் திருச்சிவிகையில் கிருஷ்ணருடன் புறப்பட்டு கருட மண்டபத்தை 7.30-க்கு அடைகிறாா்.

அங்கிருந்து இரவு 8.30-க்கு புறப்பட்டு 8.45-க்கு உறியடி கண்டருளுதலைத் தொடா்ந்து 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா்.

பக்தா்கள் அனுமதியின்றி குறைந்தளவு கைங்கா்யாா்களை கொண்டு இந்த விழா நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com