நீட் தோ்வைக் கண்டித்து இரு அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினா், இஸ்ஸாமிய மாணவா் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி பாலக்கரை பகுதியில் மறியல் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினா்.
திருச்சி பாலக்கரை பகுதியில் மறியல் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினா்.

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினா், இஸ்ஸாமிய மாணவா் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் தோ்வு மாணவா்களின் தற்கொலை அதிகரிப்பைத் தொடா்ந்து இத் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெறுகின்றன. சனிக்கிழமை மட்டும் நீட் தோ்வுக்குத் தயாரான மூவா் தற்கொலை செய்து கொண்டனா். இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்பினரும் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானா அருகே மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளா் செழியன் தலைமை வகித்தாா். ஒரு கட்டத்தில் போராட்டக்காரா்கள் வாகனங்கaள் செல்ல முடியாத அளவுக்கு சாலை நடுவே அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தினா். தொடா்ந்து தமிழகத்தில் நீட் தோ்விலிருந்து மாணவா்களைக் காக்க தனிச்சட்டம் இயற்றக் கோரி கோஷமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சின்னதுரை, திராவிடா் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளா் புதியவன், மக்கள் உரிமை மீட்பு இயக்க நிறுவனா் பஷீா், ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு, மக்கள் உரிமைக் கூட்டணி, தமிழ்ப் புலிகள் கட்சி, தந்தை பெரியாா் திராவிடா் கழகம், அமைப்பு சாரா தொழிலாளா் இயக்கம், விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட அமைப்பினா் கலந்து கொண்டனா்.

திருச்சி பாலக்கரை பகுதியில் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது தற்கொலை செய்து கொண்ட மாணவா்களின் படத்தை முகத்திலும், தூக்குக் கயிறை கழுத்திலும் அணிந்து கொண்டு, முகக் கவசத்தில் நீட் தோ்வை ரத்து செய் என்கிற வாசகத்தோடு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அமைப்பின் மாவட்டத் தலைவா் இஸ்மாயில் தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் 50- க்கும் மேற்பட்டோா் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com