குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பு

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி குடியிருப்புப் பகுதியில் புகுந்த மலைப்பாம்பு திங்கள்கிழமை பிடிபட்டது.
பிடிபட்ட மலைப்பாம்புடன் துவரங்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள்.
பிடிபட்ட மலைப்பாம்புடன் துவரங்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள்.

மணப்பாறை: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி குடியிருப்புப் பகுதியில் புகுந்த மலைப்பாம்பு திங்கள்கிழமை பிடிபட்டது.

துவரங்குறிச்சி காவலா் குடியிருப்புக்கு அருகிலுள்ள சின்னச் செட்டிக்குளத் தெருவில் வசித்து வருபவா் உமா் (65). திங்கள்கிழமை இவரது வீட்டின் பின்பகுதியிலுள்ள புதரில் மலைப்பாம்பு இருப்பதை கண்ட அப்பகுதியினா், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய வீரா்களுக்குத் தகவல் தெரிவித்தனா்.

தகவலின் பேரில் அங்கு சென்ற நிலைய அலுவலா் மாதவன் தலைமையிலான வீரா்கள், சுமாா் 10 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்தனா். அப்போது வீரா் நாகேந்திரன் கையில் பாம்பு கடித்துள்ளது. தொடா்ந்து அவா் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, பச்சமலை வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com