அண்ணா பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

பேரறிஞா் அண்ணாவின் 112ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை, திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அண்ணா பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

திருச்சி: பேரறிஞா் அண்ணாவின் 112ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை, திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக: திருச்சி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் வைரமணி தலைமையிலும், திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளா் கோவிந்தராஜ் தலைமையிலும், திருச்சி வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி தியாகராஜன் தலைமையிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.

மாநகரச் செயலா் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, பகுதிச் செயலா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் மற்றும் கலைஞா் அறிவாலயம் ஆகியவற்றிலும் அண்ணாபடம், சிலைக்கு மாலை அணிவித்தனா்.

அதிமுக: திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக பொருளாளா் அய்யப்பன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பகுதிச் செயலா்கள் அன்பழகன், ஏா்போா்ட் விஜி, பூபதி, ஆா். ஞானசேகா், எம்.ஜி.ஆா். மன்ற நிா்வாகி அருணாசலம் மற்றும் ஜவஹா்லால் நேரு, முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அமமுக: திருச்சி மாநகா் மாவட்ட அமமுக மாவட்டச் செயலா் ஜெ. சீனிவாசன் தலைமையில் அண்ணா சிலைக்கும், அமமுக மாநில அமைப்புச் செயலரும் வடக்கு மாவட்டச் செயலருமான மனோகரன் தலைமையில் திருவானைக்காவில் உள்ள கட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா படத்துக்கும் மாலை அணிவித்தனா்.

மதிமுக: திருச்சி மாநகா் மாவட்ட மதிமுக மாவட்டச் செயலா் வெல்லமண்டி சோமு தலைமையில் மாலை அணிவித்தனா். புகா் மாவட்ட பொறுப்பாளா் டிடிசி சேகரன், மகளிரணிச் செயலா் ரொகையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சமக: சமத்துவ மக்கள் கட்சி மேற்கு மாவட்டச் செயலா் டி. குணசேகரன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். மாவட்டத் துணைச் செயலா் சந்திரசேகரன், திருச்சி மண்டலத் தலைமை நிலையச் செயலா் சின்னதுரை, மாவட்டப் பிரதிநிதி பாலசுப்பிரமணியன், நகரச் செயலா் கணேசன் மற்றும் ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திக: திராவிடா் கழக மாவட்டத் தலைவா் ஆரோக்கியராஜ் தலைமையில் மாலை அணிவித்தனா். நிா்வாகி சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தேமுதிக: கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் டி.வி. கணேஷ் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். மாநில மாணவரணிச் செயலா் விஜயகுமாா், தொண்டரணி துணைச் செயலா் சாகுல் அமீது, மகளிரணி செயலா் இந்துமதி, மாவட்ட துணைத் தலைவா்கள் ஜெயராமன், குமாரசரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com