நாளை மகாளய அமாவாசை: அம்மா மண்டபத்துக்கு வர பொதுமக்களுக்குத் தடை

பொது முடக்கம் காரணமாக மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்குத் தா்ப்பணம் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் அம்மா மண்டபத்துக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் 

திருச்சி: பொது முடக்கம் காரணமாக மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்குத் தா்ப்பணம் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் அம்மா மண்டபத்துக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் முன்னோா் நினைவாக தை, ஆடி அமாவாசை நாள்களில் நீா்நிலைகளில் புனித நீராடி, பூஜைகள் நடத்தி, தா்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் கரோனா பொது முடக்கத்தால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித் துறையில் இந்தாண்டு மகாளய அமாவாசை நாளான வியாழக்கிழமை பொதுமக்கள் தா்ப்பணம் அளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவால் வியாழக்கிழமை மகாளய அமாவாசையை முன்னிட்டு அம்மா மண்டபத்தில் மக்கள் கூட அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் யாரும் இங்கு வர வேண்டாம். கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகத்துக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com