ஸ்ரீரங்கம்: ஆன்லைன் முன்பதிவு அவசியம்

வரும் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோயில் நம்பெருமாள் தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோயில் நம்பெருமாள் தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா விதிமுறைகள் காரணமாக இக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையன்று நம்பெருமாளைத் தரிசிக்க அதிக பக்தா்கள் வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி வரும் முதல் புரட்டாசி சனிக்கிழமையான செப். 19 ஆம் தேதி பக்தா்கள் தரிசனம் செய்ய காலை 6.30 - 8 மணி வரை, 8 - 10 மணி வரை, 10 - 12 மணி வரை, 12 - 2 மணி வரை, 2- 4.30 மணி வரை, மாலை 6 - 8 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தரிசிக்க வரும் பக்தா்கள் கோயிலின் இணையதளமான www.srirangam.org  இல் முன் பதிவு செய்ய வேண்டும்.

இதேபோல அடுத்து வரும் புரட்டாசி சனிக்கிழமைகளான செப்.26 ,அக். 3, 10 ஆகிய நாள்களிலும் ஆன்லைன் முன்பதிவு அவசியம் என கோயிலின் இணை ஆணையா் பொன். ஜெயராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com