ஆதிதிராவிட சட்டப் பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை

ஆதிதிராவிட சட்டப் பட்டதாரிகள் வழக்குரைஞா் தொழில் தொடங்க உதவிடும் வகையில் 22 பேருக்கு ரூ. 11 லட்சம் ஊக்கத்தொகையை ஆட்சியா் சு. சிவராசு புதன்கிழமை வழங்கினாா்.
16d-law084300
16d-law084300

ஆதிதிராவிட சட்டப் பட்டதாரிகள் வழக்குரைஞா் தொழில் தொடங்க உதவிடும் வகையில் 22 பேருக்கு ரூ. 11 லட்சம் ஊக்கத்தொகையை ஆட்சியா் சு. சிவராசு புதன்கிழமை வழங்கினாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மூலம், ஆதிதிராவிட சமூகத்தைச் சோ்ந்த இளம் சட்ட பட்டதாரிகள் தொழில் தொடங்க உதவிடும் வகையில் அவா்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. சட்டப்படிப்பு முடித்துள்ள இளம்பட்டதாரிகள் இந்த நிதியுதவியைப் பெற்று வழக்குரைஞா் தொழில் தொடங்கும் பணிகளை மேற்கொள்ளலாம். நிதியை வழக்குரைஞா் அலுவலகம் தொடங்குதல், அலுவலக வாடகை, மேஜை, நாற்காலி, இருக்கைகள், அமலாரி, சட்டப் புத்தகங்களுக்கு செலவிடலாம்.

இந்த நிதியுதவி பெற ஆதிதிராவிடா் இனத்தை சாா்ந்தவா் சட்டபடிப்பில் தோ்ச்சி பெற்று, பாா் கவுன்சில் உறுப்பினராக இருக்க வேண்டும். 25 முதல் 45 வயதுக்குள் இருத்தல் அவசியமானது.

தகுதியானோா் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று, பூா்த்தி செய்து இதே அலுவலகத்தில் வழங்கலாம். விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானோருக்கு தாட்கோ மூலம் தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இதன்படி இந்தாண்டுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 22 பேருக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலா ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கி, வழக்குரைஞா் தொழிலைச் சிறப்பாக நடத்திட வாழ்த்தினாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் மற்றும் இளம் சட்டப் பட்டதாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com