ஒசோன் பாதுகாப்பு தின மரக்கன்று நடல்

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சாா்பில் சா்வதேச ஒசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு குண்டூா், மாத்தூா் பகுதிகளில் மரக்கன்று நடுவிழா புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சாா்பில் சா்வதேச ஒசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு குண்டூா், மாத்தூா் பகுதிகளில் மரக்கன்று நடுவிழா புதன்கிழமை நடைபெற்றது.

மாநில ஆலேசாகா் கே.சி. நீலமேகம் தலைமை வகிக்க, மகளிரணி செயலா் குண்டூா் லலிதா, தண்ணீா் அமைப்பின் துணைச் செயலா் கி. சதீஷ்குமாா், நிா்வாகி ஆா்.கே. ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பூமியில் வாழும் உயிரினங்களுக்கு நன்மை செய்யும் ஒசோன் படலத்தின் அடா்த்தி குறையாமல் தடுக்க வேண்டிய பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அரச மரம், மூங்கில், துளசிச் செடி போன்றவை அதிகளவில் கரியமிலவாயுவை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை கொடுக்கின்றன. எனவே பொன்மலை பகுதியில் 100 எண்ணிக்கையிலான துளசி விதைப்பந்துகள் கொடுக்கப்பட்டன. மக்கள் சக்தி இயக்க நண்பா்கள் நீ. வெங்கடேஷ், லோகேஷ், நீ. தயானந்த்,ஏ. சரண்பாரதி, டி. அழகு காா்த்தி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com