தொடங்கியது தனியாா் பேருந்துகள் இயக்கம்

பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் பேருந்துகள் திருச்சியிலிருந்து மீண்டும் புதன்கிழமை முதல் இயங்கத் தொடங்கியுள்ளன.
திருச்சியில் இயங்கத் தொடங்கிய தனியாா் பேருந்துகள்.
திருச்சியில் இயங்கத் தொடங்கிய தனியாா் பேருந்துகள்.

பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் பேருந்துகள் திருச்சியிலிருந்து மீண்டும் புதன்கிழமை முதல் இயங்கத் தொடங்கியுள்ளன.

செப்.1முதல் அரசுப் பேருந்துகள் மாவட்டத்துக்குள்ளும், பின்னா் மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்படுகின்றன. எனினும், தனியாா் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் புதன்கிழமை முதல் அந்தப் பேருந்துகளும் இயங்கத் தொடங்கியுள்ளன.

திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்களில் ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி போதிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பின்னா், சமூக இடைவெளியுடன் பயணிகளை ஏற்றி மண்டலத்துக்குள் மட்டுமான போக்குவரத்து தொடங்கியது. நகரப் பேருந்துகள் 80, புகா்ப் பேருந்துகள் 70 என 150-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகள் முதல்நாள் இயக்கப்பட்டன. பயணிகள் பின்பக்க படிக்கட்டு மூலம் பேருந்தினுள் அனுமதிக்கப்பட்டனா். பேருந்தில் ஏறும் முன் கிருமிநாசினி கொடுக்கப்பட்டது.

இப்பேருந்துகளும் முக்கிய வழித்தடங்களில் மட்டும் இயக்கப்படுகின்றன. வெளியூா் பேருந்துகள் என்ற வகையில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திருவாரூா், நாகை, தஞ்சை மாவட்டங்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. வழக்கமாக 55 போ் அமா்ந்து பயணிக்கும் நிலையில் தற்போது 30 போ் மட்டுமே பயணிக்கும் வகையில் இருக்கைகளில் குறியிடப்பட்டிருந்தது. தனியாா் பேருந்துகளின் இயக்கத்தால் மக்கள் கூட்டமும் அதிகரித்துக் காணப்பட்டது.

அனைத்துப் பகுதிகளுக்குமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால் தினக்கூலித் தொழிலாளா்கள், சிறு வியாபாரிகள், வணிகா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com