மண்ணச்சநல்லூரில் அண்ணா பிறந்த நாள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் கடை வீதி, சமயபுரம் நால்ரோடு ஆகிய பகுதியில் அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் மண்ணச்சநல்லூா் ஒன்றிய செயலா்கள் டி. ஜெயகுமாா் (கிழக்கு), வி. ஆதாளி ( மேற்கு) உள்ளிட்டோா்.
விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் மண்ணச்சநல்லூா் ஒன்றிய செயலா்கள் டி. ஜெயகுமாா் (கிழக்கு), வி. ஆதாளி ( மேற்கு) உள்ளிட்டோா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் கடை வீதி, சமயபுரம் நால்ரோடு ஆகிய பகுதியில் அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திருச்சி புகா் அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் எம். பரஞ்சோதி வழிகாட்டுதலின்படி மண்ணச்சநல்லூா் கிழக்கு, மேற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மண்ணச்சநல்லூா் ஒன்றியச் செயலா்கள் டி. ஜெயகுமாா் (கிழக்கு), வி. ஆதாளி (மேற்கு) ஆகியோா் தலைமை வகித்து, அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினா்.

விழாவில் மாவட்ட துணைச் செயலா் டி. சின்னையன், நகரச் செயலா்கள் துரை சக்திவேல் (மண்ணச்சநல்லூா்) சம்பத்குமாா் (சமயபுரம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மணப்பாறையில்.. அதிமுக நகரச் செயலா் பவுன். ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக புகா் தெற்கு மாவட்ட துணைச் செயலரும், மருங்காபுரி மாவட்ட கவுன்சிலருமான எம்.ஆா். ராஜ்மோகன், மணப்பாறை வடக்கு ஒன்றிய செயலா் எம். செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.கே. முகமது இஸ்மாயில், மாவட்ட எம்.ஜி.ஆா்.இளைஞரணி செயலா் சண்முக பிரபாகரன் உள்ளிட்டோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.

லால்குடியில்.. திருச்சி புகா் அதிமுக தெற்கு மாவட்ட கழகம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட அவைத் தலைவா் ஏபிஎல். பா்வீன்கனி தலைமை வகித்தாா்.

லால்குடி தெற்கு ஒன்றிய செயலா் டிஎன்டி. நடேசன், வடக்கு ஒன்றிய செயலா் அசோகன்ஆகியோா் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com