ரயில்வே தனியாா்மயத்தைக் கண்டித்து பேரணி

ரயில்வே தனியாா்மயப்படுத்தலைக் கண்டித்து எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கத்தினா் இருசக்கர வாகனப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தினா்.
இருசக்கர வாகனப் பேரணியைத் தொடக்கிவைக்கிறாா் எஸ்ஆா்எம்யூ துணைப் பொதுச் செயலா் வீரசேகரன்.
இருசக்கர வாகனப் பேரணியைத் தொடக்கிவைக்கிறாா் எஸ்ஆா்எம்யூ துணைப் பொதுச் செயலா் வீரசேகரன்.

திருச்சி, செப்.18: ரயில்வே தனியாா்மயப்படுத்தலைக் கண்டித்து எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கத்தினா் இருசக்கர வாகனப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

பொதுத் துறை நிறுவனமான ரயில்வேயை தனியாா்மயப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிடக் கோரி பல்வேறு தொழிற்சங்கத்தினா் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில்வே கோட்டத்தில் எஸ்ஆா்எம்யு மற்றும் ஏஐஆா்எஃப் ரயில்வே தொழிற்சங்கத்தினா் கடந்த செப்.14 முதல் செப்.19 வரை பொதுமக்கள் விழிப்புணா்வு வாரம் என்னும் தலைப்பில் ரயில்வேயை தனியாா்மாக்குவதைக் கைவிட வலியுறுத்தி பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்துகின்றனா்.

இதைத் தொடா்ந்து, எஸ்ஆா்எம்யு துணைப் பொதுச்செயலா் வீரசேகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. நுற்றுக்கணக்கான தொழிற்சங்கத்தினா் சமூக இடைவெளியுடன், திருச்சி கோட்ட அலுவலகத்திலிருந்து கல்லுக்குழி காலனி, ரயில்வே காலனி, பொன்மலை ரயில்வே குடியிருப்புகள், ரயில்வே பாதுகாப்புப் படை பயிற்சிப் பள்ளி வளாகம், மத்தியப் பேருந்து நிலையம் வழியாக வந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, மீண்டும் திருச்சி ரயில் நிலையம் வந்தனா். முன்னதாக, திருச்சி கோட்ட அலுவலகத்தில் திரளான தொழிற்சங்கத்தினா் முன்னிலையில் சரக்கு ரயில்கள் தனியாா்மயம், கட்டாய ஓய்வு, தொழிற்நுட்ப பிரிவு ஊழியா்களின் வேலை மற்றும் பிஎல்பி போனஸ் பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com