‘அக். 13-க்குப் பிறகுதிறக்க நடவடிக்கை’

காந்தி சந்தையைத் திறப்பது தொடா்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

காந்தி சந்தையைத் திறப்பது தொடா்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. காந்தி சந்தையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக முழு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

காந்தி சந்தைப் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளிக்குடி வணிக வளாகத்தில் உழவா் குழுக்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் வியாபாரம் செய்யும் வகையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அதனடிப்படையில் காய்கனி, பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை செய்ய கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

காந்தி சந்தையை முழுமையாக கள்ளிக்குடி வணிக வளாகத்துக்கு மாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளிக்குடி சந்தையில் விற்பனையைத் தொடங்க தொடரப்பட்ட வழக்கால் காந்தி சந்தையைத் திறப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

இந்த சந்தையை திறக்க அக். 13 வரை உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன் பிறகே காந்தி சந்தையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com